follow the truth

follow the truth

October, 3, 2024
HomeTOP2"சஜித் பிரேமதாசவின் மேடையில் பழைய மத, இனவாதக் கதைகளைத் தவிர வேறு கதைகள் இல்லை"

“சஜித் பிரேமதாசவின் மேடையில் பழைய மத, இனவாதக் கதைகளைத் தவிர வேறு கதைகள் இல்லை”

Published on

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பயந்து பொய்யான தகவல்களை பரப்பும் நபர்கள் தமது அரசாங்கத்தின் கீழ் நீதிமன்றில் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மீரிகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“.. எதிரிகள் அவதூறாக சதி கதைகள் சொல்வதைத் தவிர வேறு பதில் சொல்ல முடியாத அளவுக்கு அவர்களின் அரசியல் குழம்பிப் போயிள்ளது.

ரணில் விக்கிரமசிங்க அம்பாறைக்கு செல்லும் போது அதாவுல்லாவையும், சஜித் பிரேமதாச அம்பாறைக்கு செல்லும் போது ஹக்கீமையும் அழைத்துச் செல்கிறார்.

ஆனால் நாம் தேசிய ஒருமைப்பாடு என்ற செய்தியுடன் சென்றோம், அதுதான் பல நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு.

அரசியலில் எத்தனையோ மாற்றங்கள் இருந்தாலும் சஜித் பிரேமதாசவின் மேடையில் பழைய மத, இனவாதக் கதைகளைத் தவிர வேறு கதைகள் இல்லை. திஸ்ஸ அத்தநாயக்க, கண்டி சென்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்தால் பெரஹரா நிறுத்தப்படும் என்கிறார்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் வந்தால் யானைக் எத்கந்த விகாரையின் ஊர்வலத்தை நிறுத்துவோம் என குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த சரித ஹேரத் தெரிவிக்கின்றார். அவ்வாறு கூறிய அனைவரையும், நீதிமன்றத்திற்கு கொண்டு வருவோம்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்நாட்டு அலுவல்கள், தொழில் அமைச்சிற்கு புதிய செயலாளர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின்...

நாமல் ராஜபக்ஷ குருநாகலில் போட்டியிடுவார் என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது

நாமல் குருநாகலில் இருந்து தேர்தலுக்கு வருவார் என்ற செய்தி தவறானது: வேட்பாளர்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எதிர்வரும் பொதுத்...

தேசியப் பட்டியல் இல்லாமல் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு நெருக்கடி..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் கோரி பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையிலேயே தேசியப்பட்டியலில்...