follow the truth

follow the truth

October, 6, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாநாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் இன்று நாம் ஒரு நாடாக பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம்

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் இன்று நாம் ஒரு நாடாக பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம்

Published on

‘இலங்கையில் 22 மில்லியன் மக்கள் வீதியில் நிற்கும் நேரத்தில், எந்தப் பொறுப்பையும் ஏற்க முடியாது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன், அனுரகுமார திஸாநாயக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்து வழிவிட்டுச் சென்றார். அப்போது அந்த பொறுப்பை ‘முடியும்’ என ஏற்க ஒருவர் மாத்திரமே முன்வந்தார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் ஒரேயொரு ஆசனம் மட்டுமே இருந்தது.

அவ்வேளையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்களும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தயின் சில உறுப்பினர்களும் அந்தந்த கட்சிகளில் இருந்துகொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்தனர். அப்போது நாட்டில் நிலவிய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டு மக்களுக்கு உதவவே அவர்கள் இவ்வாறு ஆதரவு வழங்கினர் என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் நேற்று (15) இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கமேற்கண்டவாறு தெரிவித்தார்.

அன்று அனைவரும் ஒன்றிணைந்து நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் இன்று நாம் ஒரு நாடாக பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இன்று நாடு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொறுப்பை ஏற்று, இலங்கை மீதான சர்வதேச சமூகத்தில் நாம் இழந்திருந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தார்.

நீண்ட காலமாக சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றிய தலைவர் என்ற வகையில் அந்த நம்பிக்கையை மிக விரைவாக கட்டியெழுப்ப முடிந்தது. 2022ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம் அந்த நம்பிக்கை மேலும் அதிகரித்தது. அதேநேரம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடிந்தது. எனவே மிகவும் சிரமப்பட்டு அடைந்த முன்னேற்றம் தொடரும் வகையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்ற வேண்டும்.’’ என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுதந்திர கட்சி கூட்டணியாக சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா அணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர்...

“எனக்குக் கொடுக்கப்பட்ட கார் தினமும் உடையும்.. RBS வெடிக்கும்” Landcruiser v8 குறித்து டயானா கருத்து

தான் இராஜாங்க அமைச்சராக இருந்த போது ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட வாகனம் மிகவும் பழுதடைந்திருந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்...

லால் காந்தவின் கருத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி பதில்

கே. டி.லால் காந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி வெளியிட்ட கருத்து குறித்து ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு ஒன்றினை...