பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும், பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் அல்லது விநியோகம் தொடர்பான சேவைகளும் இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏகநாயக்க நேற்று (20) வெளியிட்டார்.