எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர்.
கொழும்பில் நடைபெறும் கூட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.