முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து முன்னாள் அமைச்சர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன குறிப்பிட்டார்.
இதேவேளை, பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி வரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.