5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சில கேள்விகள் முன்னரே வெளிவந்துள்ளதாக தெரிய வந்ததன் மூலம் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று(26) கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். விசாரணைகள் மிக விரைவில் நிறைவடையும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.