follow the truth

follow the truth

October, 8, 2024
HomeTOP1கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி

Published on

இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் ‘கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை’ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று(28) பார்வையிட்டார்.

அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர,சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.

இதன்போது கண்காட்சிக்கு வருகை தந்திருந்த மக்கள் ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பளித்தனர்.

இங்கு 400 புத்தக கூடங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றைப் பார்வையிட வந்திருந்த மக்களோடு ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற ‘கொழும்பு சர்வதேச புத்தக் கண்காட்சி’ செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06 ஆம் திகதி இரவு 9.00 மணி வரையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடத்தப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு பாதை தற்காலிகமாக பூட்டு

கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு வழி பாதையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக...

வேட்பாளர்கள் சொத்து விபரங்களை கையளிக்க வேண்டும்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக்...

பல பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிக கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100...