follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ஒரே நிலைப்பாடு

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ஒரே நிலைப்பாடு

Published on

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் நாட்டுக்கு நல்லது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணிக்கான பேச்சுவார்த்தை முறிவடையும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த இரண்டு நிபந்தனைகள் காரணமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னத்தில் உருவாகும் புதிய கூட்டணி போட்டியிட வேண்டும் என்பதும் அதில் ஒரு நிபந்தனை.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றைய நிபந்தனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...