follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

Published on

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த வளாகத்தில் வைத்து இன்று(01) அந்தந்த நிறுவனங்களுக்கே மீண்டும் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது 19 வாகனங்களை மீள கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, அவற்றில் 15 வாகனங்கள், முன் அறிவித்தலுக்கமைய வருகை தந்திருந்த குறித்த நிறுவனங்களின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 8 வாகனங்ளும், நிதி அமைச்சின் 03 வாகனங்களும் தென் மாகாண சபை, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு, வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தலா ஒவ்வொரு வாகனங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 15 வாகனங்கள் மீளக் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...