follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதிக்கு வாழ்த்து

Published on

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா இன்று (01) புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், இலங்கையில் அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்தியமைக்காக இலங்கை மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

1966 ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை சுட்டிக்காட்டிய அசகாவா, பல ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களிலும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதிலும் ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியான பங்காளியாக இருந்து வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவமானது இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வலுவாக முன்னோக்கி கொண்டு செல்ல உதவும் எனவும் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் இலங்கை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வேலைத்திட்டத்தை புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நிறைவேற்ற முடியும் எனவும் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...