follow the truth

follow the truth

July, 15, 2025
HomeTOP1அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி - கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

Published on

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்த போதே இந்த உடன்பாட்டை வெளியிட்டனர்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவி 2022-2024 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது.

அந்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார ரீதியில் பயனுள்ள வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாக கொரிய எக்ஸிம் வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவுக்கு பிணை

நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக ஊழல் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI), வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்ததாக பங்குச்...

மஹியங்கனை அருகே விபத்து – கார் கால்வாயில் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் இன்று (15) காலை ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...