follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉள்நாடுசர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாவனல்லை மாணவன் சாதனை

சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாவனல்லை மாணவன் சாதனை

Published on

சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் 2024ம் ஆண்டுக்கான போட்டியானது வென்சோ, சீனாவில் நடைபெற்ற நிலையில் இலங்கையினை பிரதிநிதித்துவப்படுதி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கணித நிலையினை பிரதிநிதித்துவப்படுத்தி மாவனல்லை சாஹிரா கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவன் ஆர்.எம்.உஸைர் (R.M.Uzair) கலந்துகொண்டு சர்வதேச வெண்கலபதக்கம் பெற்று தனது பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த போட்டியானது ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 6ம் திகதி வரை சீனாவில் வென்சோவில் இடம்பெற்றிருந்தது.

கணித நிலையினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து மாணவர்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் ஏ.எச்.ரிஸ்வான் மற்றும் எம்.ஆர்.எப்.முஜாஹிதா தம்பதியினரின் புதல்வருமாவார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...