இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி பல்லேகல மைதானத்தில் தற்சமயம் இடம்பெறுகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Kusal Mendis அதிகபட்சமாக 124 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Charith Asalanka 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Taskin Ahmed மற்றும் Mehidy Hasan Miraz தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி பங்களாதேஷ் அணிக்கு 286 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.