எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (14) இடம்பெறவுள்ளன.
இன்று தபால்மூல வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கு 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 02 சுயேட்சைக் குழுக்களும் உறுதிமொழிகளை தாக்கல் செய்திருந்த போதிலும், அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சைக் குழுவும் மாத்திரமே தமது வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்தன.
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.