follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉலகம்குப்பை லொரியில் பயணித்து கவனம் ஈர்த்த டொனால்ட் ட்ரம்ப்

குப்பை லொரியில் பயணித்து கவனம் ஈர்த்த டொனால்ட் ட்ரம்ப்

Published on

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப், குப்பை லொரியில் பயணித்து கவனம் ஈர்த்துள்ளார். அவரது ஆதரவாளர்களை குப்பைகள் என அதிபர் ஜோ பைடன் விமர்சித்த நிலையில் இந்த அதிரடி எதிர்ப்பை ட்ரம்ப் வெளிக்காட்டியுள்ளார்.

குடியரசு கட்சி சார்பில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப், தனது பெயரை தாங்கிய போயிங் 757 ரக விமானத்தில் இருந்து தரையிறங்கி உடனடியாக வெள்ளை நிறத்தில் அவரது பெயருடன் தயாராக இருந்த குப்பை வண்டியில் பயணித்தார்.

இதன் மூலம் ஜோ பைடன் தெரிவித்த கருத்தை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தில் தனக்கு சாதகமாக ட்ரம்ப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். “எப்படி உள்ளது எனது குப்பை லாரி? கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனுக்கு நான் கொடுக்கும் மரியாதை இது” என ட்ரம்ப் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று ஒரே நாளில் 5 விமானங்களை இரத்து செய்த ஏர் இந்தியா

அகமதாபாத் - லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. விமான...

அகமதாபாத் – லண்டன் ஏர் இந்தியா விமானம் இரத்து

அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில்...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...