follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

Published on

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையை நவம்பர் 30, டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆம் திகதிகளில் நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதில்லை என முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் சீரற்ற வானிலை தணிந்து வரும் போதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமுலில்

வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு...

பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று...