சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.
“தெரிவுக் குழுவுக்கு தான் தெரிவு செய்யப்படாமை குறித்து அர்ச்சுனா எனும் புதிய எம்பி எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
நாம் சுமுகமாகத்தான் பேசினோம். நானும் அலவத்துகொட எம்பியும் அங்கிருந்தோம். அப்போது தான் வாக்குவாதம் இடம்பெற்றது. அவரது பேச்சினை இங்கு என்னால் கூற முடியாது பின்னர் அது இனவாதக் கருத்தாக மாறும். அவர் மனநிலை பாதிக்கப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளான நபராகத்தான் எனக்கு தோன்றுகிறது… அவரது நடவடிக்கைகளும் அப்படித்தான் இருக்கின்றது..”