follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2வெறுங்காலுடன் நடப்பதினால் ஏற்படும் நன்மைகள்

வெறுங்காலுடன் நடப்பதினால் ஏற்படும் நன்மைகள்

Published on

இன்றைய காலகட்டத்தில் வெறுங்காலுடன் நடப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் கூட பலரும் வெறுங்காலுடன் நடப்பதற்கு விரும்புவதில்லை.

தெருக்கள், சாலைகள் சமநிலையின்மை, சுத்தமின்மை, உடைந்த கண்ணாடி, கட்டிட பொருட்கள், குப்பைகள் குவிந்து கிடப்பது உள்ளிட்ட காரணங்கள் வெறுங்காலுடன் நடப்பதற்கு தடையாகவும் இருக்கின்றன.

வெறுங்காலுடன் நடக்கும்போது பாதங்களில் உள்ள நரம்பு முனைகள் தூண்டப்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படி கால்களுக்கும், நரம்புகளுக்கும் அழுத்தத்தை கொடுத்து இயக்குவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க உதவும். தளர்வான, மன அழுத்தம் இல்லாத சூழலை ஏற்படுத்தவும் இந்த நடை பயணம் உதவிடும்.

வெறுங்காலுடன் நடப்பது கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களை துரிதமாக வேலை செய்ய தூண்டும். உடல் தோரணையை மேம்படுத்தவும் துணை புரியும். காலணிகளை அணிந்து நடக்கும்போது கால்களின் முழு அசைவையும் அனுபவிக்க முடியாது. அது ஒரு விதத்தில் உடல் தோரணையை மாற்றலாம்.

அடிக்கடி வெறுங்காலுடன் நடப்பதன் மூலம் உடலை நன்கு சமநிலைப்படுத்தக் கற்றுக் கொள்ளலாம் என்று நம்பப்படுகின்றது.

காலணிகளை அணிவது கால்களின் இயல்பான இயக்கத்தை மட்டுப்படுத்தலாம். அதே சமயம் வெறுங்காலுடன் நடப்பது கால்களின் தசைநார்கள் மற்றும் தசைகள் வலுப்பெற உதவிடும்.

வெறுங்காலுடன் நடப்பது உள்ளங்கால்களுக்கு அழுத்தம் கொடுக்கும். அதன் மூலம் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்த வழிவகை செய்யும். இதய ஆரோக்கியத்துக்கும் பலம் சேர்க்கும். தொடர்ந்து கால் பாதங்களை தரையில் அழுத்தி மசாஜ் செய்வது கால்களில் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

வெறுங்காலுடன் செல்வது உள்ளங்கால்களில் படிந்திருக்கும் இறந்த சரும செல்களை அகற்ற உதவும். இதன் விளைவாக பாதங்கள் மென்மையாக இருக்கும்.

வெறுங்காலுடன் நடப்பது நினைவாற்றலையும் அதிகரிக்கச் செய்யுமாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...