follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉலகம்தியேட்டரில் நெரிசலில் சிக்கி பெண் பலி - நடிகர் அல்லு அர்ஜுன் கைது

தியேட்டரில் நெரிசலில் சிக்கி பெண் பலி – நடிகர் அல்லு அர்ஜுன் கைது

Published on

சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அல்லு அர்ஜுன் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் 2021ல் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. படத்தின் 2வது பாகம் உலகம் முழுவதும் கடந்த 5ம் திகதி 12 ஆயிரம் வெளியானது.

புஷ்பா – 2 படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4ம் திகதி இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா தியேட்டருக்கு வந்திருந்தனர்.

படத்தை விட இருவரையும் காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுப்படுத்த முடியாத கூட்டம், கரகோஷம் என நிலைமை எல்லை மீறி போக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வேறு வழியின்றி தடியடி நடத்த ஆரம்பித்தனர்.

குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி மற்றும் 9 வயதான அவரது மகன் இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது அங்கும் இங்கும் ஓடிய ரசிகர்கள், இருவர் மீதும் ஏறி மிதித்ததில் படுகாயமடைந்தவர்கள், மூச்சுப் பேச்சின்றி சுயநினைவை இழந்து உயிர்ழந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக அல்லு அர்ஜூன், திரையரங்க உரிமையாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. அதனால் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை, ரத்து செய்யக்கோரி தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இன்று நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...

பயணிகள் கப்பல் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல்...

அடுத்த தலாய் லாமா தெரிவில் சீனாவிற்கு இடமிருக்காது – 14ம் தலாய் லாமா திட்டவட்டம்

புத்த மத தலைவரும் திபெத் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா வரும் ஜூலை 6ம் திகதி தனது 90வது...