follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1தற்போதைய மக்ரிபுடைய நேரத்தில் இருந்து ஒரு நிமிடத்தை பிற்படுத்திக் கொள்வது தொடர்பான அறிவித்தல்

தற்போதைய மக்ரிபுடைய நேரத்தில் இருந்து ஒரு நிமிடத்தை பிற்படுத்திக் கொள்வது தொடர்பான அறிவித்தல்

Published on

ரமழான் மாதத்தில் தற்போதைய மக்ரிபுடைய நேரத்தில் இருந்து ஒரு நிமிடத்தை பிற்படுத்திக் கொள்வது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

நாட்டில் சூரிய உதயம், அஸ்தமனம் மற்றும் தொழுகை நேரங்கள், முன்னைய ஆலிம்களால் உருவாக்கப்பட்டு, பின்னர் அல்-ஆலிம் அப்துல் ஸமத் ரஹிமஹுல்லாஹ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தொழுகை நேர அட்டவணையின் அடிப்படையில், தற்போதுவரை அமுலில் இருந்து வருகின்றது.

இந்நிலையில், புவியியல் மாற்றங்கள் பாதைகள் விஸ்தரிப்பு மற்றும் உயர் மாடிக் கட்டிடங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சில நாட்களில் மக்ரிப் தொழுகையின் அதான் சொல்லப்படும் நேரத்தில் சூரியன் தென்படுவதை அவதானிக்க முடிகின்றது.

எனவே, குறித்த விடயத்தை மக்களுக்கு அறிவூட்டுவதற்காக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் ஹஸனிய்யா அரபுக் கல்லூரியும் இணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டு தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.

ஆகவே, கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் இருப்பவர்கள் மக்ரிப் தொழுகையின் அதானை கலண்டரிலுள்ள நேர சூசியில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்துடன் ஒரு நிமிடத்தைக் கூட்டி அந்நேரத்தில் அதான் சொல்லி நோன்பு திறக்கமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

May be an image of ‎text that says "‎2025.03.03 HIJRI1446 RAMADAAN 02 สริตใคธ์ ជាាង ኣንቃ ل MMに ரமழான் மாதத்தில் மக்ரிப் நேர அதான் தொடர்பாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் மக்ரிப் தொழுகையின் அதானை கலண்டரிலுள்ள நேர சூசியில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்துடன் ஒரு நிமிடத்தைக் கூட்டி அந்நேரத்தில் அதான் சொல்லி நோன்பு திறக்கமாறு கேட்டுக்கொள்கிறோம். திகதி மஃரிப் அதான் நோரம்: கற்போதைய நோம் மார்ச் 01-20 01 மார்ச் 21-30 கலண்டர் நோம் 06:23 PM மார்ச் 31 06:22 PM 06:21PM PΜ 06:21 +94117190190 +94117 wwwacjuik AlCeyian Jamyyathul Ulena Ulema(AC.U) ACLU) 06:20 nosacuk @ACJUNew អកសាម់នករ‎"‎

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை...

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய...