follow the truth

follow the truth

June, 18, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாரிஷாட் பதியுதீன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இடையே சந்திப்பு

ரிஷாட் பதியுதீன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இடையே சந்திப்பு

Published on

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சாங்கை இன்றைய தினம் (26) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன், எமது நீண்டகால தொடர்புகள் மற்றும் நிலைபேறான தன்மை குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போது, புனித ரமலான் மாதத்தில், காஸா மக்கள் எதிர்கொண்டுள்ள பெரும் துயரங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பிலும் ஆழ்ந்த கவலையை தூதுவரிடம் வெளிப்படுத்தினோம்.

மேலும், மனிதாபிமான விடயங்களை முன்னிறுத்தியும் உலக அமைதிக்காகவும் அமெரிக்கா தனது ஆதரவினை வழங்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...