follow the truth

follow the truth

May, 5, 2025
Homeஉள்நாடுநாடளாவிய ரீதியில் இன்றைய தினம் கடும் வெப்பம்

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் கடும் வெப்பம்

Published on

நாடளாவிய ரீதியில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்றைய தினம் கடும் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பத்தால் ஏற்படும் நோய்நிலமைகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்கவும். அதிளவு நீர் பருகவும் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கவனமாக இருக்கவும்.

வெளியிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் அல்லது சிறுவர்களை நீண்ட நேரம் தனித்து விட வேண்டாம் முடிந்தளவு வெளியில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள், வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிந்து செல்லுங்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை மறுதினம் மூடப்படவுள்ள பாடசாலைகள் விபரம்

உள்ளூராட்சி தேர்தல்கள் காரணமாக, மே 7, 2025 அன்று சில பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. அமைச்சகம்...

சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மே 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான்...

நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்றும், நாளையும் நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி...