follow the truth

follow the truth

May, 5, 2025
Homeஉள்நாடுநிமேஷின் மரணம் - சடலத்தைத் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு

நிமேஷின் மரணம் – சடலத்தைத் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு

Published on

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த நிமேஷ் சத்சர என்ற இளைஞரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக 23ஆம் திகதி மீண்டும் தோண்டி எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்மாதம் 23 ஆம் திகதி பிரேத பரிசோதனைக்காக உடலைத் தோண்டி எடுக்கக் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அனுமதி கோரியதாகக் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் ரிஸ்வான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

உடலைத் தோண்டி எடுக்கும் போது, அதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பதுளை நீதவானிடம் தெரிவித்தார்.

அத்துடன் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ள 3 பேர் கொண்ட வைத்திய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்தமை – விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை...

முதல் மூன்று மாதங்களில் 1,000 இற்கும் மேற்பட்ட இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 1,250இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனவரி முதலாம்...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...