மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம், தொடரில் முதல் வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளையும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது