follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட அனுஷ்டானங்களில் கலந்து கொள்வது தொடர்பான இஸ்லாமிய...

சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட அனுஷ்டானங்களில் கலந்து கொள்வது தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்

Published on

இஸ்லாம் இவ்வுலகுக்கு அருளப்பட்ட பரிபூரண மார்க்கமாகும். அது உலகில் சாந்தியையும் சமாதானத்தையும் பரப்ப வந்த மார்க்கமாகும். மேலும், இம்மார்க்கம் தனி மனிதர்களுக்கும் மனித குலத்திற்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்துவதை அதன் உயரிய குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. மேலும், இஸ்லாம் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் உலக சமாதானத்தையும் மனித இன ஐக்கியத்தையும் வலியுறுத்துகின்றது.

எமது தாய்நாடான இலங்கை பல இனத்தவர்களும் பல சமூகங்களும் வாழும் நாடாகும். இங்கு வாழும் பிற சமயத்தவர்களுடன் அன்போடு பழகி அவர்கள் மத்தியில் உள்ள ஏழைகள், விதவைகள், நோயாளிகள், அங்கவீனர்கள் போன்றோருக்கு உதவி செய்வதையும் அவர்களது மத வழிபாடு தொடர்பான அனுஷ்டானங்களுடன் சம்பந்தப்படாத விடயங்களில் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதையும் இஸ்லாம் வரவேற்கின்றது. இதுவே இஸ்லாம் கூறும் சகவாழ்வாகும்.

எனினும், சகவாழ்வு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் பிற சமயத்தவர்களின் வணக்க வழிபாடுகளுடன் தொடர்புபடும் மத நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாமிய மத நிகழ்வுகளில் கலந்துகொள்வதும் இஸ்லாமிய வழிமுறையல்ல. இன்னும் ஏனைய மதங்களின் நடைமுறையிலும் இவை காணப்படுவதில்லை.

ஆகவே, முஸ்லிம்கள் தமது இறை நம்பிக்கை (ஈமான்) க்கு முரணான விடயங்களில் ஈடுபடுவதை தவிர்ந்து நடந்துகொள்ளுமாறும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது ஆலிம்களின் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நிறைவேற்று குழு மற்றும் ஃபத்வாக் குழு அனைத்து முஸ்லிம்களையும் வினயமாகக் கேட்டுக் கொள்கிறது.

குறிப்பு: சகவாழ்வு தொடர்பான ஐம்இய்யாவின் வழிகாட்டலை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.

https://new.acju.lk/wp-content/uploads/2025/01/Declaration-of-Unity.pdf

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...