கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அல்காட்ராஸ் சிறைச்சாலையை திறப்பது சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக திகழும் எனவும், அமெரிக்காவின் கடுமையான சிறைகளில் ஒன்று என்ற மோசமான பெயரை இந்த சிறை பெற்றிருந்தது.
1983இல் இச்சிறைச்சாலை மூடப்பட்டதாக கூறப்படும் நிலையில், அமெரிக்காவில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்
தற்போது இச்சிறைச்சாலை சான் பிரான்சிஸ்கோவின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது