புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது.
முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர் கரும்புகை வெளியேறியுள்ளது. இதன் அர்த்தம் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படவில்லை என்பதாகும்.
கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று(07) ஆரம்பமானது.
உலகளாவிய ரீதியில் இருக்கும் 252 கத்தோலிக்க கர்தினால்களில் 135 பேர் கூடி புதிய பாப்பரசர் ஒருவரை தெரிவு செய்யவதற்காக சிஸ்டைன் தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படும் வரையில் கர்தினால்கள் வௌி உலகத்துடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்த முடியாது.
வத்திக்கான் நேரப்படி நேற்றிரவு 9 மணியளவில் சிஸ்டைன் தேவாலயத்தின் கூரையில் உள்ள புகைபோக்கியில் இருந்து கறுப்பு புகை வௌியானது.
அதற்கமைய இரகசிய வாக்கெடுப்பு இன்றும்(08) இடம்பெறவுள்ளது.