புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது.
புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது.
முதலில் இடம்பெற்ற வாக்குப் பதிவுக்குப் பின்னர் சிஸ்டைன் சிற்றாலயத்துக்கு மேல் பொருத்தப்பட்டுள்ள புகைபோக்கியிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதன் அர்த்தம் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படவில்லை என்பதாகும்.
இந்நிலையில், 2ஆவது தடவையாகவும் சிஸ்டைன் சிற்றாலயத்திற்கு மேல் பொருத்தப்பட்டுள்ள புகைபோக்கியிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. ஏனெனில், இதுவரை ஒரு புதிய பாப்பரசரை தெரிவு செய்யவில்லையென்பதே இதன் அர்த்தம்.