அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, அவரது ராஜினாமாவை அந்த சபை ஏற்றுக்கொண்டதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன