மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர்.
நியூயார்க் நகரின் புரூக்ளின் பாலத்தில், நேற்றிரவு மெக்சிகோ நாட்டு கடற்படைக் கப்பல் விபத்தில் சிக்கியது.
சனிக்கிழமை மாலை மோதலுக்கு முன்பு அந்த படகில் மின்தடை ஏற்பட்டதாக நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். நல்லெண்ணப் பயணமாக வருகை தந்த அந்த கப்பலில் 277 பேர் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
குவாஹ்டெமோக் என்ற கப்பல், பாலத்தின் அடியில் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டுள்ளது. இணையத்தில், பரவி வரும் வீடியோவில் கப்பல் பாலத்தின் அடியில் மோதும் காட்சி இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்த, புரூக்ளின் பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இது ஒரு முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.