பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல் வித் ஜோ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகின்றார்.
இவர் கடந்த 2023ம் ஆண்டு ஏஜெண்ட் மூலமாக விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றார். அப்போது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஸ் எனப்படும் எஹ்சான் உர் ரஹீம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த டேனிஸ் 2025ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் ஜோதி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜோதியை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் எழுத்து மூலமாக வாக்குமூலம் பெறப்பட்டு இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.