follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1விண்ணைத்தொடும் பால்மா விலை!

விண்ணைத்தொடும் பால்மா விலை!

Published on

பால்மா ஒரு கிலோ பால்மாவின் 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

புதிய விலை ஏற்றத்தின்படி கிலோ பால்மா விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா விலை 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பைக்கட்டின் புதிய விலை 1,345 ரூபாவாகவும், 400 கிராம் பால்மா பைக்கட்டின் புதிய விலை 540 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அண்மைக் காலமாக பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், வீடுகளில் தமது பிள்ளைகளுக்கு பால்மா பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். நேற்று வரை பல்பொருள் அங்காடிகளிலும், சில்லரை விற்பனை நிலையங்களிலும் பால்மாவிற்குப் பெரும் தட்டுப்பாடு நிலவியது.

சில அங்காடிகளில். குறிப்பிட்டளவு வேறு பொருட்களை கொள்வனவு செய்தால் மட்டுமே 400 கிராம் பால்மா பொதியொன்றைக் கொள்வனவு செய்ய முடியும் என்ற எழுதப்படாத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

சில அங்காடிகளில் 2,500 ரூபாவிற்கு வேறு பொருட்களைக் கொள்வனவு செய்பவர்களுக்கு மட்டுமே ஒரு பொதி பால்மா வழங்கப்பட்டு வருகிறது.

எவ்வாறாயினும், தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், தொழில்களுக்குச் செல்லாது அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் வரிசையில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...