கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரு மகள்களும், மருமகன் ஒருவரையும்பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று இவர்களைக் கைது செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
நிதிமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான போது கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, ஒவ்வொரு சந்தேகநபரும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப்பிணைகளிலும் செல்வதற்கு நீதவான் உத்தரவிட்டார்.