follow the truth

follow the truth

June, 22, 2025
HomeTOP1தற்போது உள்ள 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை அவசரமாக தீர்க்கப்பட வேண்டும்

தற்போது உள்ள 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை அவசரமாக தீர்க்கப்பட வேண்டும்

Published on

சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.

உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர், டிஜிட்டல் கல்வி நிலை மாற்றத்தை (வகுப்புகள் 6-13) மேற்பார்வையிட அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த கருத்துகளை வெளியிட்டார்.

கல்வித் துறையில் டிஜிட்டல் நிலை மாற்றத்தை ஆரம்பித்தல்,
“உரிய சவால்களை எதிர்கொண்டு தேவையான கொள்கைகளை செயற்படுத்து கல்வித்துறையில் டிஜிட்டல் நிலை மாற்றத்தை ஆரம்பித்தல் குறித்து இந்தக் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போது உள்ள 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை அவசரமாக தீர்க்கப்பட வேண்டும்.

தற்போதுள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக, தற்போதுள்ள வளங்களை திறம்பட பயன்படுத்தி கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக அடுத்த ஆறு மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைமைகளை அறிமுகப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்த பணிக்குழுவின் முதன்மை நோக்கங்களில், மாற்றுத்திறனாளி சமுதாயம் உட்பட அனைத்துப் பாடசாலைகளுக்கும் வசதிகளின் சமமான விநியோகத்தை உறுதி செய்வது அடங்கும். இந்த இலக்கை அடைவதற்கு வலுவான, பல்துறை பணிக்குழு அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின் போது பணிக்குழு அதிகாரிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதோடு பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை...

இஸ்ரேலில் உள்ள 5 இலங்கை தொழிலாளர்கள் நாடு திரும்ப கோரிக்கை

இஸ்ரேலில் தொழில்புரியும் 5 இலங்கைத் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இதுவரையில்...

கோரிக்கைகளைத் தொடர்ந்து பாராளுமன்ற ஊழியர்களுக்கான உணவுக் கட்டணம் குறைப்பு

பாராளுமன்ற பணிக்குழாமினரின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர்...