அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வர்த்தகம் மற்றும் இறக்குமதி விவகாரத்தில் டிரம்ப் கடும் கெடுபிடிகளை காட்டி வருகிறார்.அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கும் வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், கனடா உடனான வர்த்தகப் பேச்சு உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கனடா கூடுதல் வரி விதித்ததற்கு அதிபர் டிரம்ப் எதிர்ப்பு. கனடாவின் செயல் அப்பட்டமான விதிமீறல் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.