follow the truth

follow the truth

June, 29, 2025
HomeTOP1‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம்

‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம்

Published on

தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கடந்த அரசியல் கலாசாரத்தை மாற்றம் செய்து தற்போதைய அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கல் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அது நிலையானதாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நாட்டின் அனைத்து துறைகளையும் புதிய நிலைக்கு உயர்த்தவும் இதேபோன்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதற்காக செயல்படுத்தப்படும் திட்டத்தில் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என்றும், சிறிய அரசாங்கங்களுக்கும் தனிப்பட்ட அதிகார வர்க்கத்தினர்களுக்கும் தங்கள் விருப்பப்படி போக்குவரத்து சட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கப்படாது என்றும், வலுவான போக்குவரத்து சட்ட முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

அதேசமயம் பொதுச் சொத்துக்கள் திருடப்படுவதைப் பற்றி ஒரு சமூகமாக நாம் அஞ்ச வேண்டும் என்றும், அனைவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(27) நடைபெற்ற ‘Dream Destination’ 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தினமும் சுமார் எட்டு பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துவதாக மேலும் சுட்டிக்காட்டினார்.

வலுவான போக்குவரத்து சட்ட கட்டமைப்பின் ஊடாக,வீதி விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், நச்சு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும், வாகன இறக்குமதிக்காக செலவிடும் அரசாங்கத்தின் பாரிய செலவைக் குறைக்கவும் உதவும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதன்படி, நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்பட்ட, வசதியான மற்றும் திறமையான சேவையாக மாற்றும் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக அரசாங்கம் மேற்கொண்ட முதலீடுகளுக்கு மேலதிகமாக, தனியார் துறைக்கு முதலீட்டு வாய்ப்புகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு நாட்டின் ரயில் நிலையங்களை புதிய தனித்துவத்துடன் முத்திரை பதிக்க அரசாங்கத்துடன் இணையுமாறு தனியார் துறையினருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் ‘Clean Sri Lanka’ திட்டம் ஆகியவை இணைந்து தனியார் துறையின் ஆதரவுடன் 100 ரயில் நிலையங்களை பொது-தனியார் கூட்டுத் திட்டமாக (Public-Private Partnership) நவீனமயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் சுத்தமான, அழகான ரயில் நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

வீதிப் பாதுகாப்பு செயல் திட்டத்தை (The Road Safety Action Plane 2025 – 2026) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

AI பயன்பாடு குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பு

அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது...

டோக்கன் பெறுவது தொடர்பான அறிவித்தல்

எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள்...

ஜூனில் ஒரு இலட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூன் மாதத்தின் முதல் 26 நாட்களில், 116,469 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி...