follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1உரிய தகவல்கள் இல்லாத உப்பு பொதிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை

உரிய தகவல்கள் இல்லாத உப்பு பொதிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை

Published on

இறக்குமதியாளர் அல்லது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் சில்லறை விலை உள்ளிட்ட உரிய தகவல்கள் குறிப்பிடப்படாத உப்பு பொதிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இறக்குமதியாளர் அல்லது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் சில்லறை விலை குறிப்பிடப்படாத உப்பு பொதிகளை சில இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சந்தையில், விநியோகித்துள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறான உற்பத்திகளை கொள்வனவு செய்யவோ விற்பனை செய்யவோ வேண்டாம் என பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பொருட்களை விநியோகிக்கும் இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரின் சரியான தகவல்கள் மற்றும் விலை விபரங்கள் அடங்கிய முறையான விலைப்பட்டியல்களை தம்வசம் வைத்திருக்க வேண்டுமெனவும், அவ்வாறு விலைப்பட்டியல் இன்றி பொருட்களை தம்வசம் வைத்திருக்கும் வர்த்தகர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...