15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு இன்று (ஜூலை 1) முதல் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்று தர மேலாண்மை ஆணையத்தின் (CAQM) வழிகாட்டுதலின் படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
வாகனங்களின் RC-ஐ சரிபார்த்த பின்னரே பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், தடையை மீறினால் அபராதம் விதிக்க பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.