சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ஒன்று, தற்போது 100 ரூபாய் முதல் 170 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளதாகவும் வருமானமும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் வீழ்ச்சியடையக் கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.