மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவின்ன பேருந்து நிறுத்தத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த ஒரு பேருந்து, மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற மற்றொரு பேருந்துடன் மோதியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்குள்ளான பேருந்தை தற்போது பொலிஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பாக மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.