பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மஹர நீதவான் நீதிமன்றத்தின் பிரதான நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் பிரசன்ன ரணவீர இன்று (14) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.