follow the truth

follow the truth

July, 16, 2025
Homeஉலகம்வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா

Published on

சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் மூலம் நேற்று மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர்.

இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம் இன்று மதியம் வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது.

இதையடுத்து, டிராகன் விண்கலத்தில் உள்ள 2 சிறிய ‘டுரோக்’ பாராசூட்டுகள் பூமிக்கு மேல் சுமார் 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் கலிபோர்னியா கடலின் மேல் பகுதியில் திறக்கப்பட்டது. அதன்பின், 4 பெரிய பாராசூட்டுகள் விரிந்து பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது.

அதன்பின், 10 நிமிடங்களில் ஸ்பேஸ் எக்ஸின் மீட்புக் கப்பல் விண்கலத்தை அடைந்தது. விண்கலத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றனர்.

சுக்லாவின் பணி இஸ்ரோவின் ககன்யான் திட்டங்களுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும் என நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதித்த வியட்நாம்

வியட்நாமில், காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக...

காசா ‘மனிதாபிமான நகரம்’ திட்டம் – வதை முகாமுக்கு சமம் என கடும் எதிர்ப்பு

தெற்கு காசாவில் உள்ள ராஃபாவில் இடிபாடுகளில் 'மனிதாபிமான நகரம்' ஒன்றை கட்டும் திட்டத்தை காட்ஸ் முன்மொழிந்தார். தெற்கு காசாவின் இடிபாடுகளில்...

யுக்ரைன் போரை 50 நாட்களில் முடிக்காவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்

யுக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அடுத்த 50 நாட்களுக்குள் ரஷ்யா போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக...