follow the truth

follow the truth

July, 17, 2025
Homeஉள்நாடு2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

Published on

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் போக்குகள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்படி, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி நிதியமைச்சின் அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன், வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைக் கோருவதற்கான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும், அந்தந்த நிறுவனங்கள் தொடர்பான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை உரிய செலவின வரம்பிற்குள் சமர்ப்பிப்பதற்கு இம்மாதம் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தைத் திட்டமிடும்போது, நாட்டை தற்போதைய நிலையிலிருந்து மீட்டெடுக்க அவசியமான முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இதன்படி, டிஜிட்டல் மயமாக்கல், பொதுப் போக்குவரத்தை வலுவூட்டல், பொருளாதாரத்திற்கு கிராமிய சமூகத்தின் பங்களிப்பு போன்றவற்றின் அடிப்படையிலான செயற்திட்டங்களில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை வழங்கினால் மாத்திரம் போதாது என்றும், குறித்த வேலைத் திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு கிடைக்கிறதா என்பதை ஆராய்ந்து அதற்குத் தேவையான பொறிமுறைகளை பலப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாத்தறை வலயத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்

மாத்தறை வலயத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் அதிகாரிகள், கடமையை தவறாக பயன்படுத்தியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை வலய...

கெஹெலியவும் குடும்பத்தினரும் சிக்கினார்கள் – குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது, 97...

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று துறைசார் மேற்பார்வைக் குழுவில்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு இன்று...