வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா உற்சவம் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
இந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக, ஜூலை 30ஆம் திகதி முதல் 10 நாட்கள் தொடர்ந்தும் கும்புல் பெரஹெரா மற்றும் ரந்தோலி பெரஹெரா வீதிகளில் ஊர்வலமாக நடைபெறும் என தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்தார்.
அதே சமயம், ஊர்வலங்களில் பயன்படுத்த வேண்டிய போதுமான அளவு யானைகள் இல்லாதது தற்போது ஒரு முக்கிய சிக்கலாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.