நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள 397 வத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தீயில் சிக்கிய அந்த நபர் தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் அவர் உயிரிழந்தார்.
சுமார் 50 வயதான இந்த நபர், சம்பவம் நிகழ்ந்த வீட்டில் வாடகை அடிப்படையில் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பாக நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.