கடந்த இரண்டு மாதங்களில் 21 காட்டு யானைகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
நேற்று (25) பொலன்னறுவை பகுதியில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
காட்டு யானைகளுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து விசாரணை நடத்தும் பணி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பலவித காரணங்களினால் காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த “பாத்திய” காட்டு யானை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்தது.
இதனால் காட்டு யானைகள் மீதான கவனம் அதிகரித்துள்ளது என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.