போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்றும்(25) சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சோதனை நடவடிக்கையின் போது, 24,281 பேர் சோதனை செய்யப்பட்டனர். மேலும் 7,240 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 10,175 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதன்படி, இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றங்களுக்காக 1,455 பேர் கைது செய்யப்பட்டனர். அத்தோடு 374 கிராம் 336 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 218 கிராம் 281 மில்லிகிராம் ஹெரோயின் உள்ளிட்ட ஏராளமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சோதனைகளின் போது குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 408 பேரும் இந்த சோதனை நடவடிக்கையின் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.