follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1க.பொ.த உயர்தர பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்

க.பொ.த உயர்தர பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்

Published on

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.

இந்த பரீட்சையானது, இன்றைய தினம் முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரையில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2,437 பரீட்சை மையங்களில் இடம்பெறவுள்ளது.

இந்த பரீட்சைக்கு 345,242 பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில், 279,141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 66,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.

அதேநேரம், பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் பரீட்சார்த்திகள் தமது பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின், பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவரானி புனிதா தெரிவித்தார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் கொவிட்-19 தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் தமது பரீட்சைக்குரிய தினத்திற்கு முன்தினமே, மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள விசேட கொவிட் பரீட்சை நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு, அவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் உரிய வகையில் வழங்கப்படும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவரானி புனிதா குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சாமர தொடர்பில் ரணிலின் பகிரங்க கருத்து பிழையானது – இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16)...

இலங்கையிலிருந்து மின்னணு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய ஜப்பான் ஆர்வம்

இலங்கையிலிருந்து இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானின் வெளியுறவு வர்த்தக ஒழுங்கமைப்பின்...

சாமரவின் பிணை இரத்து செய்யக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்...