மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட பணிகள் 2024 செப்டெம்பர் 14 ஆம் திகதி நிறைவடையும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இன்று(08) பாராளுமன்றத்தில் வாய்மூலம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கிடையில், அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட பணிகள் 2020 ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டதுடன், முதல் 12 கிலோமீற்றர் பகுதியின் நிர்மாணப்பணிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களால் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.