பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து மன்றில் விடயங்களை முன்வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், விசாரணைகளை மேற்கொண்டு மன்றில் விடயங்களை முன்வைப்பதற்கு போதிய கால அவகாசத்தை வழங்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.